×

இலைக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மாஜி அமைச்சர் பெல் பற்றி சொல்கிறார் wikiயானந்தா

‘‘ஆர்ப்பாட்டத்தில் விமர்சனம் செய்ததால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத மணியானவர்’’ பற்றி சொல்லுங்கள் என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துகாரர் அணி சார்பில் தூங்காநகரத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் கடலோர மாவட்டத்தில் நடந்தது. இதில் மாஜி அமைச்சர் மணியானவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால கடலோர மாவட்ட இலை கட்சி நிர்வாகிகள் ஆவலுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் வழக்கம் போல் மணியானவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் உச்சகட்ட டென்சனில் இருந்த நிர்வாகிகள், முக்கியமாக நடக்க கூடிய ஆலோசனை கூட்டத்தில் மணியானவர் ஏன் பங்கேற்கவில்லை என ரகசியமாக விசாரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலோர மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கம்போல் காலதாமதமாக கலந்துகொண்ட மணியானவர் சிறப்புரையாற்றினார். கட்சி கூட்டமாக இருந்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி மணியானவர் எப்போதுமே காலதாமதமாக வந்து கலந்துகொள்வது வழக்கமாக வைத்துள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அடிமட்ட தொண்டர்கள் வரை மணியானவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால, தொண்டர்கள் கூட தன்னை மதிப்பதில்லை என மணியானவர் மன உளைச்சலில் இருந்து வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றால் எதாவது குற்றத்தை கண்டுபிடித்து விமர்சனம் செய்வாங்க. தேவையில்லாமல் பிரச்னை வரும் என நினைத்து ஆலோசனை கூட்டத்தில் மணியானவர் பங்கேற்க வில்லையாம்… ஆனால், அவர் சின்ன மம்மி விசுவாசி என்ற ரகசியத்தை கட்டி காப்பாற்ற தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று இன்னொரு கோஷ்டி கொளுத்தி போட்டுள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஆசிரியர்களை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறனை கண்டுபிடிக்க ‘பேட்டரி டெஸ்ட்’ என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுதாம். இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த விளையாட்டுல ஆர்வம் இருக்குது என்பதை கண்டறிந்து, அந்த விளையாட்டுல பயிற்சி அளித்து பதக்கங்களை குவிக்க வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். ஆனா வெயிலூர்ல ஜெயிலுக்கு பக்கத்துல இருக்குற அரசு பள்ளியில மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகளை நடத்தலையாம். இங்கு இருக்குற பிஇடி வாத்தியாருங்க விளையாட்டு போட்டிகள் அடங்கிய பட்டியல கையில வச்சுக்கிட்டு அவங்க இஷ்டத்துக்கும் போட்டி நடத்தி தேர்வு செஞ்சதா டிக் அடிச்சு இருக்காங்களாம். இதனால மாணவர்கள் விருப்பம் இல்லாத போட்டிகள்ல பயிற்சி பெறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கு. இதனால பதக்கம் வெல்ல துடிக்கும் ஆர்வத்துல வர்ற மாணவர்கள் வாய்ப்பு கிடைக்காம தவிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சின்ன மீனை போட்டு, பெரிய மீனை யார் பிடிக்கிறா…’’ என்று கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த கல் குவாரிகளில் அரசு அனுமதிக்கு மாறாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, கேரளாவுக்கு கடத்துறாங்க. சில அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சப்போர்ட் காரணமாக கடத்தல் தொடர்கிறதாம். இதற்கிடையில், இத்துறையை நிர்வகித்து வரும் கோவை மாவட்ட அதிகாரி ஒருவர், பத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகளை ஆய்வு செய்து, சுமார் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தார். ஆனால், யாரும் அபராத தொகையை செலுத்தவில்லை. இதற்கிடையில், கல் குவாரி உரிமையாளர்கள் சிலர், ‘என்ன சார்… இப்படி பண்ணிட்டீங்களே’ என கெஞ்சியுள்ளனர். அதற்கு, அவர், ‘மேலதிகாரி மனது வைத்தால் இந்த அபராத தொகையை ரத்து செய்யலாம், ஆனால் அதற்கு கைமாறாக நீங்கள் ஏதாவது எனக்கு செய்யணும்…’ என பேச்சுக்கு இடையில் பொடி வைத்து பேசினாராம். அத்துடன், மேலதிகாரிக்கு எந்த மாதிரி உருக்கமாக கடிதம் எழுதவேண்டும் எனவும் சொல்லிக்கொடுத்துள்ளார். அதன்படி, பல கல் குவாரி உரிமையாளர்கள் கடிதம் எழுதி வைத்துக்கொண்டு, மாவட்ட உயரதிகாரியிடம் கொடுப்பதற்காக காத்து கிடக்கிறாங்க. வெறும் மிரட்டலிலேயே இந்த அதிகாரி காசு குவிக்கிறாரே… நம்மால பத்து பைசா சேர்க்க முடியலையே என்று மற்ற துறையை சேர்ந்த அதிகாரிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிசிடிவி கேமரா காலத்துல மை போட்டு பார்க்கும் காக்கி அதிகாரி யாரு…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘முட்டை மாவட்டத்தில் நெய் மணக்கும் ஊரில் உள்ள காக்கி அதிகாரி ஒருத்தரு தொடர்ந்து சர்ச்சை நாயகராக மாறிக்கிட்டு இருக்காராம். இவரு வாயை திறந்தாலே சர்ச்சைதான் என்ற நிலை இருந்தது. இதனால் நடுவில் ெகாஞ்சநாள் அவரது மவுத் லாக்காகி இருந்ததாம். ஆனால் இப்போது அவரது திருவாய் மலர்ந்து புதிய சர்ச்சை கிளம்பியிருக்காம். இவரது எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன் லிமிட்டில் அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்த 50 பவுன் பட்டப்பகலில் திருடுப்போச்சாம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரும் அவரது என்கொயரியில் சிக்கலையாம். இதனால் செம அப்செட்டில் இருந்தாராம் இந்த காக்கி அதிகாரி. ஆனால் நகையை பறிகொடுத்தவர்கள் தரப்போ என்ன ஆச்சு என்று கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம். மீடியாக்களும் இதே கொஸ்டினை எழுப்பியிருக்காங்க. இதனால் செமஹாட்டான இன்சு, ‘‘என்கொயரி எல்லாம் முடிஞ்சிருச்சு. இப்போ மை போட்டு பாத்துக்கிட்டு இருக்ேகாம். இதில் கண்டிப்பா அக்கியூஸ்ட் சிக்கிடுவான். அவன் சிக்குனதும் உங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பறேன்,’’ என்றாராம் காக்கி அதிகாரி. சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே திருடன் சிக்குவான், அவனை இவர் மை போட்டு பார்க்கிறேன் என்று சொல்கிறாரே…’’ என்று வேதனையோடு மக்கள் திரும்பி போனாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலைக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மாஜி அமைச்சர் பெல் பற்றி சொல்கிறார் wikiயானந்தா appeared first on Dinakaran.

Tags : maji minister ,Peter ,Salathukarar ,Bell ,Leicher ,wikiananda ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...